Thursday, December 25, 2025

“மொபைல், கம்ப்யூட்டர் லாம் ‘waste’? இந்த ஜெனரேஷனோட முடிஞ்சது! வரப்போகும் செம்ம ‘system’!

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு – அதாவது Artificial Intelligence – ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால், நாம் இப்போது பயன்படுத்தும் கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள், இந்த வளர்ச்சிக்கேற்ப வடிவமைக்கப்படவில்லை என்பது தான் ஒரு உண்மை.

இந்த நிலையில்தான், OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தற்போதைய கணினிகள், செயற்கை நுண்ணறிவில்லாத ஒரு உலகத்துக்கே உருவாக்கப்பட்டவை” என அவர் தெரிவிக்கிறார். அதனால், AI மையமாக கொண்டு புதியதொரு சாதனத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம்.

இந்த முயற்சியில், உலகப்புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஜானி ஐவ் அவருடன் கைகோர்க்கிறார். ஆப்பிள் நிறுவனத்தில் iPhone-ஐ உருவாக்கியவரே ஜானி ஐவ். இவர்கள் இருவரும் இணைந்து, முற்றிலும் புதிய வகை AI சாதனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த சாதனம், சாதாரண தொலைபேசியோ, மடிக்கணினியோ அல்ல. திரை இல்லை, விசைப்பலகை இல்லை. கண்ணாடி மாதிரி வடிவமும் கிடையாது. ஆனால் இது,கையிலோ அல்லது பையிலோ எளிதாக வைக்கக்கூடிய அளவுக்கு சிறியது. உங்கள் குரலையும், சுற்றுச்சூழலையும் உணர்ந்து, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் செயல்படும்.

இது, voice, sensor, மற்றும் AI தொழில்நுட்பத்தின் மூலம், உங்களை நன்கு புரிந்துகொண்டு பேசும் ஒரு digital துணைவனாக செயல்படும். இதுவரை வந்த எந்த சாதனத்துடனும் ஒப்பிட முடியாத வகையில், இது முற்றிலும் புதிய அனுபவத்தை தரும்.

சாம் ஆல்ட்மேன் உறுதியாகச் சொல்லுகிறார் – “இந்த சாதனம் வரலாற்றிலேயே வேகமாக 100 மில்லியன் பயனர்களை அடையும்.” இந்த சாதனம் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெறும் ஒரு புதிய சாதனம் மட்டும் அல்ல… நம் தொழில்நுட்ப உலகத்தை புரட்டிப் போடக்கூடிய, ஒரு புதிய தொடக்கம்!

Related News

Latest News