Friday, December 26, 2025

“இனிமே நீங்க பார்க்க போகும் பழனிச்சாமி வேற” – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்  அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  பா மோகன் , எம் எல் ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பிரபு அழகுவேல் பாபு  உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர் பேசுகையில் 2026- சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக  இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும்.

அம்மா மறைவிற்குப் பிறகு கருணாநிதி எவ்வளவு முயற்சித்தார். அதிமுகவை அழிக்க முடியவில்லை. எனவே ஸ்டாலின் அவர்களே உங்கள் கனவு பலிக்காது.

ஸ்டாலின் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை போதை பொருட்கள் கஞ்சா போதை பொருள் என அனைத்தும் அதிகரித்து விட்டது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தவறு செய்வதை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி திமுக ஆட்சி.

எங்கள் ஆட்சி காலத்தில் எண்ணற்ற சாலைகள், பாலங்கள் தடுப்பனைகள் கட்டப்பட்டது … அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக தலைவாசல் கால் ஆராய்ச்சி கொண்டு வரப்பட்டது என்பதால் அதை 4 ஆண்டுகளாக பூட்டி கிடப்பில் போட்டது திமுக அரசு.

திமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் வழக்குகள் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் தொடர்ந்து நடைபெறும். ஸ்டாலின் அவர்களே இதுவரை பார்த்த பழனிச்சாமி வேறு, இனிமேல் பார்க்க போகும் பழனிச்சாமி வேற என எச்சரித்துள்ளார்.

Related News

Latest News