Sunday, July 27, 2025

“கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வது வழக்கமாகி விட்டது” – சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக – பாஜக இடையில் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. அரசியலில் ஒத்த கொள்கை இருந்தால் தான் கூட்டணியாக வேலை செய்ய முடியும். ஆனால் கொள்கையை விட்டுவிட்டு கூட்டணி என்றால், அதனை எப்படி ஏற்பதென்றே புரியவில்லை.

கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வது வழக்கமாகி வருகிறது. கொள்கை இல்லாமல் கூட்டணி வைக்கிறோம் என்றால், எந்த கொள்கையை நிறைவேற்ற கூட்டணி வைக்கிறோம் என்ற கேள்வி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்திருந்தால், இப்போது உடனிருக்கும் அணிகள் இருந்திருந்தால் அதிமுகவுக்கு 15 எம்பிக்கள் கிடைத்திருப்பார்கள். 2 மத்திய அமைச்சர்கள் கூட கிடைத்திருக்கலாம். அந்த இடத்தில் கணிப்பு தவறாக போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுகக்கு பலனாக இருந்திருக்கும், ஆனால் தமிழ்நாட்டை யார் ஆள்வதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று அவர் விமர்சித்தார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News