Tuesday, July 29, 2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவினர் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள நாசா கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில் நான்கு பேர் கொண்ட ஆக்ஸியம்-4 குழு, டிராகன் விண்கலத்தில் பயணித்து, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம் சுபான்ஷு சுக்லா, ISS-க்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த குழு அடுத்த 2 வாரங்கள் ISS-ல் தங்கி, 7 விதமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News