Thursday, December 25, 2025

வெறும் 11 ரூபாய்க்கு ’10 GB’ டேட்டா வாரிவழங்கும் ஏர்டெல், ஜியோ

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ இரண்டும் பயனர்களைத் தக்க வைத்துக்கொள்ள, அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன. அந்தவகையில் தற்போது இரண்டு நிறுவனங்களும் சூப்பரான டேட்டா திட்டமொன்றை அறிமுகம் செய்திருக்கின்றன.

இந்த திட்டத்தின் கீழ் 11 ரூபாய்க்கு 10 GB டேட்டாவை இரு நிறுவனங்களும் அளிக்கின்றன. ஆனால் இதன் வேலிடிட்டி வெறும் 1 மணி நேரம் மட்டுமே. எனவே 10 GB டேட்டாவையும் குறைந்த நேரத்திற்குள் நீங்கள் பயன்படுத்தும்படி இருக்கும்.

எனவே ஐடி பணியாளர்கள், மாணவர்கள், சினிமா விரும்பிகள் ஆகியோருக்கு இந்த திட்டம் உகந்ததாக இருக்கும். குறைந்த செலவில் அதிக டேட்டா கிடைப்பதால் தேவைப்படும் தகவல்களை, உங்களால் மொத்தமாக 1 மணி நேரத்திற்குள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News