Thursday, December 25, 2025

ChatGPT-யிடம் இதையெல்லாம் கேட்க கூடாது.., இல்லைனா ஆபத்துதான்

கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ChatGPT, பல கோடிக்கணக்கான யூஸர்கள் பயன்படுத்தும் வகையில் வெகுவிரைவாக உலகளாவிய பிரபலத்தை பெற்றுள்ளது.

எந்த கேள்வியாக இருந்தாலும் சரி, அதற்கு பதிலளிக்கும் திறன் ChatGPT-க்கு இருந்தாலும், இதை முழுவதுமாக நம்பியிருக்க கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ChatGPT-யிடம் கேட்கக் கூடாத அல்லது கேட்கத் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்

சட்டத்திற்கு எதிரான செயல்கள், ஹேக் செய்வது, மருந்து தயாரிப்பது, அல்லது பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து கேட்கக் கூடாது.

வன்முறை, தற்கொலை, தீங்கு விளைவிக்கும் ஆலோசனைகள், தேசிய அடிப்படையில் வெறுப்பு அல்லது பாகுபாடு தூண்டும் கேள்விகளை கேட்க கூடாது.

தவறான மருத்துவ ஆலோசனைகள், பொய்யான செய்திகள், அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்கள் கேட்கவும், பகிரவும் கூடாது.

ChatGPT-யை பாதுகாப்பாகவும், நன்மை பயக்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும். தவறான அல்லது ஆபத்தான தகவல்கள் கேட்கும் போது, ChatGPT பதில் வழங்க மறுக்கும்.

Related News

Latest News