Wednesday, December 24, 2025

உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த 4 ஜூஸ் வகைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் நடை பயிற்சி, உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும்.

உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க ரசாயனம் கலந்த குளிர்பானத்தை தவிர்த்துவிட்டு பழச்சாறுகளை அருந்துவது நல்லது. அந்த வகையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் 4 ஜூஸ் வகைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கேரட் ஜூஸ்
கேரட் ஜூஸ் குடிப்பதால் கண்களின் பார்வை திறன் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சரும ஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாகும்.

பீட்ரூட் ஜூஸ்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உடற்பயிற்சி திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது கல்லீரலை பாதுகாப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, உடலை வலிமையாக்கும்.

வெள்ளரி ஜூஸ்
அதிக நீர்ச்சத்துடன் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டதால் இது எடையை குறைக்கும். சருமத்தை ஈரப்பதம் மற்றும் பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும். கோடை காலத்தில் இது சிறந்த குளிர்ச்சியளிக்கும் பானமாகும்.

முலாம்பழம் ஜூஸ்
உடலை நீரேற்றம் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தி, சருமத்திற்கு அழகான பொலிவை தருகிறது. வைட்டமின் ஏ, பி, சி மற்றும் தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன.

Related News

Latest News