10 வருடமா ‘bank account’ வச்சுருக்கீங்களா? பணம் அவுட்! – ரிசர்வ் வங்கி புது சட்டம்!

நம்மில் பலருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கலாம். அவற்றில் சில கணக்குகளை நாம் எப்போது பார்த்தோம் என்பதே நமக்கே நினைவிருக்காது. பயன்பாட்டில் இல்லாமல் பல ஆண்டுகளாக இருப்பதும் சாதாரணமான விஷயம்தான். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தற்போது ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் குறித்தே இந்த மாற்றம். இப்போது, இப்படியான கணக்குகளில் உள்ள பணம், வங்கிகளிலேயே இல்லாமல், ரிசர்வ் வங்கியின் டிஇஏ என்ற ஒரு சிறப்பு நிதி அமைப்புக்கு மாற்றப்படும்.

இந்த டிஇஏ நிதி, வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களின் நலன்களை பாதுகாக்கவும், நம்பிக்கையுடன் மக்கள் வங்கி சேமிப்புகளை செய்ய ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. சொந்தமாகப் பயன்படுத்தாத அந்த நிதி, இனிமேல் சமுதாய நலனுக்காக உபயோகப்படும்.

இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர்களின் கேஒய்சி — அதாவது, அவர்களின் அடையாளத் தகவல்கள் — புதுப்பிக்கப்படும். கேஒய்சி செய்யும்போது, வீடியோ அடிப்படையில் உங்கள் அடையாளம் உறுதி செய்யப்படும். இது உங்கள் கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் ஒரு வாய்ப்பு.

நீங்கள் உங்கள் வங்கி கணக்கை நீண்ட காலமாக பயன்படுத்தவில்லை என்றால், உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு கேஒய்சி புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் கணக்கில் உள்ள தொகை டிஇஏ நிதிக்கு மாற்றப்படும்.

இது தொடர்பான சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.

இதனால், உங்கள் பழைய வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை இப்போது பார்வையிடுங்கள். தேவையானதை உடனடியாக புதுப்பிக்கவும். இது உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும்.

Related News

Latest News