Thursday, August 21, 2025
HTML tutorial

“முத்தமழையை” தொடர்ந்து வாய்ப்பு மழை.. கம் பேக் கொடுக்கும் சின்மயி – இசையமைப்பாளர் யார் தெரியுமா?

பிரபல பின்னணிப் பாடகி சின்மயி பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை..அந்த அளவிற்கு அவரது குரலால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.. அண்மையில் thug life திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி Dhee பாடிய “முத்தமழை” பாடலை சின்மயி மேடையில் பாடியிருப்பார்..இந்த பாடல் படு வைரல் ஆனது..அதாவது அவர் பாடிய பாடல் மண்டைக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கும் என்பது போன்று ரசிகர்கள் மனதில் பதிவாகிவிட்டது,அது மட்டுமின்றி சின்மயி பாடிய version வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இதைப் பார்த்த விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் சின்மயி-க்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன். மீண்டும் அவர் சினிமாவிற்குள் சாதனை படைக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேட்டியளித்து இருந்தார். இதற்கு முன்னதாக திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் ரீதியாகக் குற்றாஞ்சாட்டியிருந்தார்  சின்மயி. இந்தக் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வைரமுத்து தமிழ்த் திரையுலகத்தால் ஓரங்கட்டப்பட்டார். அதேபோல், டப்பிங் யூனியனில் இருந்தும் சின்மயி தடை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது டி இமான் சின்மயியை தனது படத்தில் பாட வைத்துள்ளார். K.S.அதியமான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் பாட சின்மயிக்கு இசையமைப்பாளர் டி. இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார்.இந்த பாடலை கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார்

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் ரெக்கார்டிங் தியேட்டரில் சின்மயியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, “என்றும் ஆன்மாவைத் தொடும் சின்மயியின் குரலில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறேன். என் மனதிற்கு நெருக்கமான ஒரு மெல்லிசைப் பாடல்” என்று பதிவிட்டுள்ளார்.

டி.இமான் வாய்ப்பு கொடுத்ததன் மூலம் சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சின்மயி தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது ரசிகர்கள் சின்மயிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News