Wednesday, July 30, 2025

நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99.

1985ம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘ஆண் பாவம்’ திரைப்படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருந்தார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்த இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார்.

இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News