Wednesday, July 30, 2025

சோசியல் மீடியாவால் வந்த பிரச்சனை.., இனி மாசம் ரூ.8 லட்சம் சம்பாதிக்க முடியாது

ரகுல் ரூபானி என்பவர் அண்மையில் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளார்.  தூதரகத்திற்குள் பேக்கினை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்பதால், உள்ளே செல்வோர் தங்களது பேக்குகளை அந்த டிரைவரிடம் கொடுத்து செல்கின்றனர். இதற்கு வாடகையாக 1000 ரூபாயை வசூலிக்கிறார். 

இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 5 முதல் 8 லட்சம் வரை வருமானம் இவருக்கு கிடைக்கிறது என பலரும் இவரின் தொழில் ஐடியாவை டிரெண்டாக்கினர். ஆனால் சமூக வலைதளங்களில் கிடைத்த புகழ் இவரது தொழிலுக்கே ஆப்பு வைத்துள்ளது.

எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் அமெரிக்க தூதரத்துக்கு வெளியே உடைமைகளை பாதுகாக்கும் தொழிலில் ஈடுபட்டதாக கூறி அவரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News