Thursday, July 31, 2025

‘முதல்ல தங்கத்தை வாங்குங்க!’ குடிமக்களை தங்கம் வாங்க ஊக்குவிக்கும் சீனா! இந்தியா செய்யப்போவது என்ன?

இப்பொழுது அப்பொழுது என தங்கம் விலை கொஞ்சமாக குறைந்தாலும் உலக அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற தன்மை இதற்கு ஒரு காரணம் என்றாலும் பல்வேறு நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிப்பது மற்றொரு முக்கிய காரணம். அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு தங்கத்தை வாங்கி கையிருப்பில் வைக்க கூடிய ஒரு நாடு என்றால் அது சீனா தான்.

சீனாவை பொருத்தவரை அமெரிக்க டாலரை வலுவிழக்க செய்ய வேண்டும் என்றால் பொருளாதார ரீதியாக தன்னை வலுப்படுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் சீனாவின் மத்திய வங்கியான CBIRC அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்களுடைய சொத்தில் ஒரு சதவீதம் தொகையை தங்கமாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. அதோடு மட்டும் நிறுத்தாமல் தங்களின் குடிமக்களையும் “தங்கம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என ஊக்குவிக்கிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சீனாவின் தங்க நுகர்வு 34 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் 2000ம் ஆண்டு சீனா அரசிடம் இருந்த தங்கத்தின் கையிருப்பு 395 டன்களாக இருந்தது. அதுவே தற்போது 2,200 டன்கள் என அதிகரித்துள்ளது. ஆனாலும் உண்மையில் சீனாவிடம் 5,000 டன்கள் தங்கம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் Weekend investing நிறுவனர் அலோக் ஜெயின் இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முக்கியமான ஒரு பதிவு கவனம் பெறுகிறது. அதாவது இந்தியா ரிசர்வ் வங்கியில் தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதில் கவனம் செலுத்துகிறது. ஆனால் சீனாவைப் போல நாட்டு குடிமக்களை தங்கம் வாங்குவதை இந்தியா ஊக்குவிப்பதில்லை என குறிப்பிட்டிருக்கிறார். இது ‘தங்கம் தான் இனி எதிர்காலம்’ என்பதை உறுதிப்படுத்தவதாகவே இருக்கிறது. இது ஒரு செய்தி மட்டுமே. இதனை பொதுமக்கள் தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News