இந்தியாவின் மின்சார கார் சந்தையை அசத்தி வரும் ஒரு கார்… JSW MG Motor-ன் Windsor EV. ஆரம்பத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த கார், தற்போது இந்தியாவின் மிக அதிகம் விற்பனையான மின்சார காராக மாறியுள்ளது.
சமீபத்தில் இந்த கார் PRO மாடலாக, இன்னும் அதிக பேட்டரித் திறன் மற்றும் பல அதிரடியான அம்சங்களுடன் சந்தைக்கு வந்தது. மே மாதம் அறிமுகமான Windsor EV PRO, வெளியானது முதல் 24 மணி நேரத்திலேயே 8,000 முன்பதிவுகள் பெற்று, ஒரு புதிய சாதனையை படைத்தது.
இப்போதே, வெறும் 8 மாதங்களில் 27,000 யூனிட்கள் விற்பனையாகி, இந்தியாவில் மின்சார வாகனங்களில் முன்னணியில் இடம்பிடித்துள்ளது. இது, பெரிய நகரங்களைத் தவிர, சிறிய நகரங்களிலும் EV தேவை வேகமாக அதிகரித்து வருகிறது என்பதற்கான நேரடி சாட்சி.
இந்த கார் இரண்டு மாறுபட்ட பேட்டரி விருப்பங்களுடன் வருகிறது. ஒன்று 38 கிலோவாட் , மற்றொன்று 52.9 கிலோவாட் பேட்டரி. இந்த பேட்டரிகளின் ஓட்டத் திறன்கள் முறையே 332 கிலோமீட்டர் மற்றும் 449 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் குறைந்த விலை மாடல் ₹9.90 லட்சம், மேலும் மேம்பட்ட PRO மாடல் ₹18.10 லட்சம் ஆகும்.
பாதுகாப்பு அம்சங்களைப் பார்க்கும்போது, இது ஒரு Level 2 ADAS காராகும். இதில் 12 மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், 6 airbags, EBD உடன் ஆன்டி-லாக் பிரேக்கிங்(Anti-lock braking systems), ஹில் ஹோல்ட்(Hill Hold) , front & back பார்க்கிங் சென்சார்கள், EPS, டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா, Rain-sensing wipers, Follow-me headlights , seatbelt reminder என பாதுகாப்பில் சிறந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் இருக்கைகள் மிக வசதியானவை. 604 லிட்டர் பூட் ஸ்பேஸ், பயணத்துக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துச் செல்ல போதுமானதாக இருக்கும்.
இந்தக் கார் நகரங்களில் மட்டுமல்ல, குடும்ப பயணங்களுக்கும், வணிக பயணங்களுக்கும் மிகவும் ஏற்றது. அதுவும் மின்சாரத்தில் இந்தளவுக்கு பெருமை கூட்டும் வாகனம் என்றால், அது MG Windsor EV தான்.