Thursday, August 21, 2025
HTML tutorial

AK 64 இயக்குனர் ‘இவர்தான்’ விரைவில் ‘அதிகாரப்பூர்வ’ அறிவிப்பு?

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை அடுத்து அஜித் அடுத்ததாக அவரது 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது கார் ரேஸில் முழுக்கவனம் செலுத்தி வருவதால், அக்டோபர் மாதத்தில் இருந்து அஜித் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தநிலையில் AK64 படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி மீண்டுமொருமுறை அஜித்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியால் மறுபடியும் அஜித் படத்தை தயாரிக்க, மைத்ரி நிறுவனம் முன்வந்துள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க தற்போது தமன்னா, பூஜா ஹெக்டே இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இசையமைப்பாளராக சாய் அபயங்கர், ஜி.வி.பிரகாஷ் இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமுள்ளன.

இதில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யாவை அணுகி இருக்கின்றனராம். ராமேஸ்வரத்தில் தொடங்கி போலந்து நாட்டில் முடிவது போல ஆதிக் திரைக்கதையை எழுதி உள்ளாராம். விரைவில் AK64 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News