மிரட்டும் இந்திய விமானப்படை! இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் வரும் புதிய Tejas A1 போர் விமானம்!

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சமீபத்திய மோதல்களுக்கு பின்னர், இந்திய விமானப்படை தனது பலத்தை அதிகரிக்கும் நோக்கில் HAL Tejas A1 என்ற புதிய போர் விமானங்களை இம்மாதம் பெறவிருக்கிறது. இவை இஸ்ரேலின் நவீன ராணுவ தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 40 தேஜஸ் விமானங்களை இந்தியா பெற்றிருந்தாலும், இந்த புதிய A1 மாடல்களில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ் A1-ல் Elta நிறுவனம் தயாரித்த AESA ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பாகங்களுடன் உருவாக்கப்படுகிறது.

மட்டுமல்லாமல் Elbit Systems வழங்கும் ஹெல்மெட்-மவுண்ட் டிஸ்ப்ளே, Rafael நிறுவனத்தின் Derby guided ஏவுகணைகள் போன்றவை இதில் இணைக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நவீனமயமாக்கப்பட்ட போர் விமானங்கள் “Make in India” திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இஸ்ரேல் விமானங்களுக்கே அமெரிக்க ரேடார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்த தேஜஸ் விமானங்களிலும் அதிகமாக இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டன என்பது கவனம் பெறுகிறது. HAL நிறுவனம், புதிய தலைமுறை தேஜஸ் விமானங்களையும் canard wings-உடன் வடிவமைத்து வருவது. இந்திய பாதுகாப்புத்துறை தன் பெலனை அதிகரிக்கும் முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.

Related News

Latest News