Tuesday, July 1, 2025

இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் 5 ரூபாய்.., ஷாக் கொடுத்த அமேசான்

இந்தியாவில் இ-காமர்ஸ் சேவை நிறுவனங்களில் அமேசான் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்வது வழக்கம்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் செயலி வாயிலாக நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ஐந்து ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். அமேசான் நிறுவனம் தங்கள் செயலி வாயிலாக எடுக்கப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஐந்து ரூபாயை மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக வசூல் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

முதலில் சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் தான் தங்களுடைய செயலிகள் வாயிலாக இதுபோன்ற பிளாட்பார்ம் கட்டணங்களை வசூல் செய்ய தொடங்கின. தற்போது அமேசானும் அதே வழியை பின்பற்ற தொடங்கி இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news