Sunday, July 27, 2025

திலகபாமாவை நீக்கிய ராமதாஸ்..மீண்டும் சேர்த்துக்கொண்ட அன்புமணி – பாமகவில் குழப்பம்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அன்புமணி ஆதரவாளர்கள் பலரும் ராமதாஸின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

நேற்று(வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், ‘அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந்நிலையில் பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி பாமக நிறுவனர்-தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை பாமகவின் புதிய பொருளாளராக நியமித்துள்ளார்.

இதையடுத்து பாமகவின் பொருளாளராக திலகபாமாவே தொடர்வார் என்று அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.

ராமதாஸுக்கு பதிலளிக்கும் வகையில் அன்புமணி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது பாமகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News