தங்கம் விலை ஒரு சிறிய உயர்விற்குப்பின் இன்று சரிந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்நிலையில் தங்கம் விலை சரிவிற்கு பல முக்கிய காரணங்கள் “இது தான் அது தான்” என்று List நீண்டுகொண்டே போவதோடு வரும் நாட்களிலும் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என சந்தை கணிப்புகள் சொல்கின்றன.
இந்நிலையில் இது தங்கம் வாங்க சரியான நேரமா? தங்கம் விலை சரிவுக்கு பின் இருக்கும் காரணங்கள் எவை, இப்போது தங்கம் வாங்கலாமா என்பது குறித்து நிபுணர்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் வர்த்தக போரை நிறுத்தி வர்த்தக பதற்றங்கள் தணிந்தது தங்கம் விலை சரிவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மட்டுமல்லாமல் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது, ரஷ்யா – உக்ரைன் போர் சமாதான பேச்சு வாரத்தைகள் நடந்து வருவது போன்ற காரணங்களால் தங்கம் விலை இப்போது சரிந்துள்ளது. தங்கம் விலை களைகட்டும் அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை இந்தாண்டு 65% சரிந்ததும் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக கருதப்படுகிறது. மேலும் சர்வதேச நாடுகள் பணவீக்கத்தை ஈடுகட்ட தங்கத்தை வாங்கி குவித்ததால் விலை உச்சம் அடைந்தது. அதனால் மக்கள் “ஆளை விடுங்கப்பா” என்று “தங்கத்துக்கு முழுக்கே” போட்டுவிட்டனர். இதனால் மக்களிடையே தங்க நுகர்வு குறைந்துள்ளதால் அதுவும் விலை குறைய காரணமாக இருக்கிறது.
இப்படி சில காரணங்களால் தற்காலிகமாக தங்கம் விலை சரிவை அடைந்திருந்தாலும் நீண்டகால அடிப்படையில் தங்கம் விலை உயரலாம் என்றும் JP மோர்கன், கோல்ட்மேன் sachs போன்ற இந்தியாவின் முக்கிய சந்தை ஆய்வாளர்களும் கணிக்கின்றனர். இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதனை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்க