Tuesday, July 1, 2025

பூமியை அச்சுறுத்தும் சூரியன்! அதிர்ந்து போன விஞ்ஞானிகள்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

சூரியனிலிருந்து வெளியாகும் காந்தப்புயல் கதிர்கள் மற்றும் அலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சூரியனின் காந்த புலன்களுக்கு அருகே இருக்கும் வளிமண்டலப் பகுதிகள் அடர்த்தி குறைவாக இருப்பதால், அங்கு உருவாகும் சிறிய துளைகளான Coronal Holes – மூலம் மின்காந்த அலைகள் வெளியேறும். இதைத்தான் Solar Wind என்று அழைப்பார்கள்.

இந்த சோலார் விண்ட் ஒரு மணி நேரத்திற்கு 2.9 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. இது பூமி போன்ற கிரகங்களை தாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. தற்போது இது பூமியை நோக்கி வரும் நிலையில், லெவல் 1 புவி காந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது மாதிரியான தாக்கம் முதன்முறையல்ல. சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 12,350 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சோலார் புயல், பூமியின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Earth and Planetary Science Letters வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த சோலார் புயல் மரங்களில் உள்ள வளையங்களில் கூட பாதிப்புகளை ஏற்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது.

மரங்களில் காணப்படும் கார்பன்-14 அதிகரிப்பு அதற்கான முக்கிய ஆதாரமாகும். கார்பன்-14 என்பது சூரியத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கும்போது உருவாகும் கதிரியக்கத் தன்மையுடைய ஐசோடோப் ஆகும். 2012இல் ஃபுசா மியாகே என்ற விஞ்ஞானி இதை முதன்முதலில் கண்டுபிடித்ததிலிருந்து, இது “Miyake Event” என்று அழைக்கப்படுகிறது.

இந்த சோலார் புயல் காரணமாக கிரீன்லாந்து பனிக்கட்டிகளில் பெரிலியம்-10 அளவும் கூட அதிகரித்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த புயலின் பரவலையும், தாக்கத்தையும் உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில், அந்தப் புயல் ஏற்பட்டு இருந்தது ஐஸ் ஏஜ் காலத்தில். அதாவது, ஒரு வருடம் முழுக்க காஸ்மிக் ரேடியேஷனை பெற்றதை விட, வெறும் 8 நொடிகளில் பூமி அதே அளவிலான தாக்கத்தை சந்தித்தது.

இது ஒரு நாளில் முடிந்துவிடாத தாக்கம். பல மாதங்கள் இடைவிடாது கதிர்வீச்சை ஏற்படுத்தி, பூமியின் ஒவ்வொரு பகுதியில் கடுமையான பாதிப்பை உருவாக்கியது.

இந்த சம்பவம், இன்று மறுபடியும் நிகழ்ந்தால், உலகின் மொத்த தகவல் தொடர்பு முறைகள் முழுமையாக முடங்கி, மீண்டும் இயல்புக்கு வர பல ஆண்டுகள் பிடிக்கும் என்பது உறுதி. விஞ்ஞானிகள் இந்த சாத்தியமான அபாயத்தைக் கருத்தில் கொண்டு தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news