Sunday, May 25, 2025

டிரம்ப் ஒரு முடிவோட தான் இருக்காரு! தங்கம் விலை இனி ‘இப்படி’ தான்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க!

உலகத்தில் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் துல்லியமா ஒரு விடையே கிடைக்காது போலிருக்கிறது. அது என்ன கேள்வியென்றால் “இந்த தங்கம் விலை வரும் நாட்களில் ஏறுமா இறங்குமா?” என்பது தான். இதனால் பொதுமக்களும் தலைசுற்றி குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்றும் அதற்கு என்ன காரணம் என்பதையும் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் நச்சென்று விளக்கியுள்ளார்.

இதைப்பற்றி அவர் தனது யூடியூப் சேனலில், ‘டிரம்பின் ஒரு மசோதா இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது. அதில் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துள்ள அதேநேரம் எக்கச்சக்கமான வரி விலக்குகளையும் கொடுத்துள்ளனர். அதாவது பெருந்தொற்று இல்லாத அமைதியான சூழலில் கூட அமெரிக்காவில் தனது பற்றாக்குறையைக் குறைக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

டிரம்பின் ஏடாகூடமான நடவடிக்கைகள் டாலர் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாக இருந்தாலும், டாலருக்கு வேறு மாற்று இல்லை என்பதால் தப்பித்து வருகிறது. இருப்பினும், ஒரு நாள் அதன் மீதும் அழுத்தம் அதிகரிக்கவே போகிறது. இதுபோன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இப்போது தங்கத்திற்கு முக்கியமான சப்போர்ட்டே டிரம்ப் தான். அவர் இருக்கும் வரை பயமில்லை. அவர் ஓடி ஓடி தங்கம் விலை உயர வேலை செய்கிறார் என்றே சொல்லலாம்.

இந்தச் சூழலில் அமெரிக்க பெடரல் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து அதன் வட்டி விகிதத்தைக் குறைக்க வைத்தால் தங்கம் விலை மேலும் உயரும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை” என்று கூறியிருப்பது தங்கம் விலை குறையும் என்று காத்திருந்தோரின் நம்பிக்கையில் மண் அள்ளி போடுவதாகவே இருக்கிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதனை பொதுமக்கள் கட்டாயமாக தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news