விழுப்புரத்தில் காரில் 180 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், விழுப்புரம் பழைய பூங்கா அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற காரை போலீசார் நிறுத்த முயன்றபோது, காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றனா்.
தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சித்ரா உள்ளிட்ட போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று பிடித்தனா். அந்த காரை சோதனையிட்ட போது, 180 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து காரையும், காரிலிருந்த 180 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், காரிலிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா்.
அவா்கள் சதீஷ் மற்றும் சத்தியநாராயணன் என்பது தெரியவந்தது. பின்னர். இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.