Saturday, May 24, 2025

திருமண விழாவில் துப்பாக்கி சூடு : மணமகன் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இதில் ராஜன் யாதவ் (வயது 30) என்ற மணமகன் அழைப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் ஊர்வலத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் ராஜன் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news