சென்னை, விழுப்புரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தாம்பரம், குரேம்பேட்டை, வண்டலூர், முடிச்சூர், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.