Tuesday, July 1, 2025

‘மூச்சை நிறுத்தி விடுவோம்’ ! இந்தியாவை மீண்டும் சீண்டும் பாகிஸ்தான்!

 “தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம்” – இது பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறிய அதிர்ச்சிகரமான எச்சரிக்கை. இந்தியாவுக்கு எதிரான இந்த ஆணவம், ஒரு சாதாரண அரசியல் கருத்தாக இல்லாமல், தீவிரவாத பேச்சாகவே இரட்டிக்கப்படுகிறது. ஏனெனில் இதே வார்த்தைகளை முன்னாள் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் முன்பே பயன்படுத்தியுள்ளார் – தண்ணீர் இல்லை என்றால் இந்தியர்கள் உயிரிழக்க நேரிடும் எனக் கூறியிருந்தார்.

இப்போது அந்த வார்த்தைகள் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து நேரடியாக வருவதால், ராணுவமும் தீவிரவாதமும் ஒரே எண்ணத்தில் செயல்படுகிறார்கள் என்பதற்கே இது துல்லியமான சாட்சி.

இதன் பின்னணி 1960 ஆம் ஆண்டு நடந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம். உலக வங்கி நடுவராக இருந்து உருவாக்கிய இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியா பியாஸ், ரவி, சட்லெஜ் என்ற மூன்று கிழக்கு நதிகளை பெற்றது. பாகிஸ்தான், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் என்ற மூன்று மேற்கு நதிகளைப் பெற்றது. சிந்து நதியின் மொத்த நீரில், இந்தியா 30% மட்டுமே பெறுகிறது; 70% பாகிஸ்தானுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையை மீறி தீவிரவாத ஆதரவை அளிப்பதால், இந்தியா இப்போது அந்த ஒப்பந்தத்தைத் தளர்த்தியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் செனாப் நதி வற்றிய நிலையை சந்தித்து வருகிறது. பஞ்சாபிலுள்ள சியால்கோட்டில் பாயும் செனாப், மூன்று வாரங்களாக தண்ணீரில்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்தியா தண்ணீர் அனுப்பவில்லை என்பதற்காக உயிரைக் கெடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் மிரட்டுவது, ஒரு நீர் உரிமை விவாதம் அல்ல. இது வெறுப்பின் வெளிப்பாடு. நதிகள் தண்ணீரோடு ஓடவேண்டும், வெறுப்போடு அல்ல.

 பாகிஸ்தான் ராணுவமும் அதன் தீவிரவாத சகோதர அமைப்புகளும் ஒரே மரத்தில் கிளையாகவே இருந்து வருகின்றன. இந்தியா நினைத்தால் இதற்கு அமைதியாக பதிலளிக்கலாம், ஆனால் பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news