பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்யா, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான இந்திய அரசின் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் குழுவினர் சென்ற விமானம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக நள்ளிரவில் உக்ரைன் ராணுவம், மாஸ்கோ விமான நிலையம் மீது சரமாரியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதனால் கனிமொழி உள்ளிட்ட இந்திய குழுவினர் சென்ற விமானம் சிறிது நேரம் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னர் தாமதமாக மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.