Friday, May 23, 2025

பில்லியனர் ஆன முதல் யூடியூபர்! MrBeast யாருன்னு தெரியுமா?

உலகத்திலேயே YouTube-ல் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட 27 வயதான MrBeast, இப்போது அதிகாரப்பூர்வமாக பில்லியனராகி விட்டார்.

அவரது உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன். 30 வயதிற்குட்பட்டவர்களில், எந்த பரம்பரையையும் சாராமல், தன்னாலேயே செல்வத்தை உருவாக்கிய முதல் நபர் இவர்தான்.

1998-ம் ஆண்டு மே 7-ஆம் தேதி, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் பிறந்த ஜிம்மி, 12 வயதிலேயே ‘MrBeast6000’ என்ற பெயரில் YouTube சேனலை துவங்கினார்.

ஆரம்பத்தில் video game விளக்கங்கள், சிரிப்பூட்டும் வீடியோக்கள், மற்றும் வித்தியாசமான சவால்கள் என பல்வேறு விதமான முயற்சிகளுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.

2017-ல், 100,000 வரைக்கும் எண்ணும் வீடியோவை வெளியிட்டு வைரலானார். அந்த வீடியோவை உருவாக்க அவருக்குத் 44 மணி நேரம் எடுத்துக் கொண்டதாம். அதன் பின்பு, ஒரே பாடலை 10 மணி நேரம் பார்ப்பது, முழு அகராதியை ஒலித்து வாசிப்பது, 200,000 வரை எண்ணுவது போன்ற அசாதாரண சவால்களால் அவர் உலகளவில் பிரபலமானார்.

அதனுடன், அவரது வீடியோக்கள் சமூக நலத்தையும் முன்னிறுத்தத் தொடங்கின. ஒரு வீடியோவில், தெருவில் நடக்கின்ற பொதுமக்களுக்கு \$1,000 டாலர்களை வழங்கினார். பின்னர், லட்சக்கணக்கில், மில்லியன் கணக்கில் பணம் கொடுக்கும் வீடியோக்கள் தொடர்ந்தவையாக வந்தன.

2019-ல், யார் கடைசி வரை \$1 மில்லியன் பணத்தைக் கையில் வைப்பார்களோ, அவருக்கே அந்த தொகை என்ற வித்தியாசமான போட்டியையும் நடத்தினார்.

MrBeast இன்று ஒரு பெரிய தொழில்முனைவோராகவும் வளர்ந்துள்ளார். MrBeast, Beast Gaming, Beast Reacts மற்றும் MrBeast Philanthropy என பல YouTube சேனல்கள், மொத்தமாக 415 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளன.

அவரது முக்கிய சேனல் மட்டும் 270 மில்லியன் சந்தாதாரர்களுடன், உலகின் அதிக சந்தாதாரர்கள் கொண்ட YouTube சேனலாக உள்ளது.

YouTube விளம்பர வருமானம், MrBeast Burger என்ற உணவகத் தொழில், அவரது சொந்தமான மெர்சண்டைஸ் விற்பனை, மற்றும் ஸ்பான்சர்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் அவர் மாதம் சுமார் \$5.4 மில்லியன் வரை வருமானம் ஈட்டுகிறார்.

2023 ஆம் ஆண்டில் $223 மில்லியன் வருவாய் ஈட்டியதாகவும், 2024 ஆம் ஆண்டில் $700 மில்லியனை எட்டும் பாதையில் இருப்பதாகவும் காட்டியது. இந்த நிதி விவரங்கள், ஜூன் 2024 இல் 26 வயதில் MrBeast அதிகாரப்பூர்வமாக ஒரு பில்லியனர் ஆனார் என்பதை உறுதிப்படுத்த உதவியது.

Time பத்திரிகை அவரை “உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில்” ஒருவராக பெயரிட்டது.
Forbes 2024 பட்டியலில், அதிகம் சம்பாதிக்கும் YouTuber என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

Latest news