Friday, May 23, 2025

இந்தியாவிடம் கெஞ்சிக் கதறும் ‘பாகிஸ்தான்’! அந்த விஷயத்துல ரொம்ப ‘strict’ !

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கடுமையான மோதல் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்கும் விவகாரம் இன்னும் ஒரு பெரும் சர்ச்சையாகவே உள்ளது. பாகிஸ்தான், இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனையுடன் – “சீனாவை வேண்டாம்… சவுதி அரேபியாவிலாவது வாங்க பேசலாம்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கெஞ்சுகிறார்.

இதற்குப் பின்னணி என்ன தெரியுமா? ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடில் 26 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பதிலடியாக இந்தியா ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களையும் 3 விமானப்படை தளங்களையும் அழித்தது. பாகிஸ்தான் நிலைக்குலைந்தது. தாக்க வைத்திருந்த அனைத்தும் முறியடிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் சரணடைந்து, “மோதலை கைவிடுகிறோம், இனி தாக்கமாட்டோம்” என்று கூற, இந்தியா அமைதியை ஏற்றுக்கொண்டது.

ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஒரு கடும் முடிவெடுத்தது – சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க மறுத்துவிட்டது. இந்த முடிவு இன்று வரை மாற்றப்படவில்லை. பாகிஸ்தானுக்கு இந்த நதி முக்கியமானது. அங்கு வசிக்கும் 21 கோடி மக்களுக்கு அது வாழ்க்கையின் அடிப்படை. அதனால்தான், பாகிஸ்தான் தலைவர்கள், “இப்போது பேச்சுவார்த்தையில் மோதல் முடிவுக்கு வந்தது. நீரைக் கொடுங்க” என அழுத்துகின்றனர்.

ஆனால் இந்தியா உறுதியாக நிற்கிறது. “பயங்கரவாத ஆதரவை நிறுத்தினால் தான் சிந்துநதியை பற்றி யோசிக்கலாம்” என கறாராக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது பேச்சுவார்த்தை என்றால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை பற்றித்தான் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதியாகச் சொல்கிறார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தற்போது வெகுவாக முயற்சி செய்கிறார் – “இந்தியாவுடன் பேச்சுக்கு தயார். காஷ்மீர், தண்ணீர், வர்த்தகம், பயங்கரவாத ஒழிப்பு — எதையும் பேசலாம். சீனா வேண்டாம். சவுதி அரேபியா நடுநிலையுடன் பேசும் இடமாக இருக்கட்டும்” என அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால், இந்தியா இன்னும் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்பதுதான் நிஜம்.

Latest news