Friday, May 23, 2025

BSNL – ல அடுத்து வந்தாச்சுல செம்ம பிளான்ஸ்!! அடிச்சுது பாரு ஜாக்பாட்!!

தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்ததிலிருந்து, பெரும்பாலோனோர் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL பக்கம் திரும்பி வருகின்றனர்.

BSNL ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிகவும் குறைந்த விலையிலானவை. அதனால்தான் பலர் BSNL திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், BSNL இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் நிறைய டேட்டா மற்றும் பல நன்மைகளைப் பெற முடியும்.

அதாவது ஒரு பிளான் மொத்தம் 160 நாட்கள் செல்லுபடியாகும். அதன் மாதாந்திர செலவு ரூ.178 மட்டுமே. அதாவது 5 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

அதாவது இந்த BSNL திட்டத்தின் விலை முன்பு ரூ.997 ஆக இருந்தது. ஆனால் இப்போது ரூ.947க்கு கிடைக்கிறது.அதாவது இந்த திட்டத்தில் தற்போது 50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் நீண்ட செல்லுபடியாகும் காலத்துடன் அதிக டேட்டாவையும் வழங்குகிறது.

இதில் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை பெறவும் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அழைப்பு வசதியையும் வழங்குகிறது. அது மட்டுமின்றி தினமும் 100 இலவச SMS-களையும் பெறமுடியும்.

அதிகமாக இணையம் மற்றும் அழைப்புகளைப் உபயோகிப்போருக்கு இது சிறந்த திட்டமாகும். அதே சமயத்தில், அடிக்கடி ரீசார்ஜ் செய்வதன் தொந்தரவும் இருக்காது.

சரி, எங்களால் ரூபாய் – 947 க்கு ரீசார்ஜ் செய்ய முடியாது அப்டிங்குறீங்களா..? உங்களுக்கும் குறைந்த விலையில் ஒரு திட்டம் இருக்கு!! அதாவது திட்டம் BSNL-ன் இந்த திட்டமும் மிகச் சிறந்தது. இந்த திட்டத்தின் விலை சற்று குறைவாக இருந்தாலும், அதிக டேட்டா கிடைக்கிறது. அதாவது குறைந்த விலையில் ஒரு திட்டத்தைத் தேடுகிறீர்கள், என்றால் ரூ.569 திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

முன்னதாக இந்தத் திட்டத்தின் விலை ரூ.599 ஆக இருந்தது, ஆனால் தற்போது இதன் விலை ரூ.30 குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுவீர்கள். இதனுடன், இந்தத் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளையும் அழைக்கும் வசதியையும் வழங்குகிறது. மேலும் தினமும் 100 இலவச SMS பெறலாம். இந்த திட்டம் BSNL வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஜாக்பாட் சொல்லாம்.

Latest news