தற்போது எங்கு போனாலும் சரி, எதை வாங்குனாலும் சரி “ஆதார் அட்டை” என்பது முக்கியமான ஒன்றாக இருக்குதுப்பா.
அதாவது bank முதல் government schemes வரைக்கும் எல்லா இடத்துலயும் மிகவும் முக்கியமான ஆவணமாக இருக்கு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும்க்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது இந்த ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வப்போதும், அதைப் புதுப்பிப்பது என்பது மிகவும் முக்கியம்.
அதாவது, பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி, போன் நம்பர், புகைப்படம் மாற்றங்கள் போன்ற அப்டேட் செய்ய விரும்பினால், இப்போது எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாகச் செய்யலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதாவது UIDAI – யின் படி, ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 14, 2025 ஆகும்.
இந்த ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்க இதுவே கடைசி தேதி முடிவடைந்துவிட்டால், 50 முதல் 100 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அந்த கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆதார் அட்டையை அப்டேட் செய்ய முடியும்.
சரி, இந்த ஆதார் அட்டையை அப்டேட் செய்வது எப்படி னு தெரியுமா?
அதாவது உங்கள் ஆதார் அட்டையை இலவசமாகப் அப்டேட் செய்ய நீங்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் நீங்கள் இருந்த இடத்திலிருந்து அப்டேட் செய்யலாம்..
அதாவது UIDAI யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான myAadhaar வலைத்தளத்திற்குச் செல்லவேண்டும்
பின்னர், மொழியைத் தேர்ந்தெடுத்து உள்ளே நுழையவேண்டும். இதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை பதிவிட்டு, அந்த தொலைபேசி எண்ணில் OTP வரும், அதனை உள்ளிட்டு மேலும் தொடரவும்.Aadhaar Update ஆப்சன் காண்பிக்கப்படும், அதைக் கிளிக் செய்யவும். Documents Update கிளிக் செய்த பிறகு, பல விருப்பங்கள் காண்பிக்கப்படும். மாற்ற அல்லது அப்டேட் செய்ய விரும்பும் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்றவற்றைக் கிளிக் செய்யவும்.பின்னர் புதுப்பிக்கப்பட்ட தகவலுடன் தொடர்புடைய ஆவணத்தைச் சமர்ப்பிக்கவும்.முகவரியை மாற்ற முகவரிச் சான்று தொடர்பான ஆவணத்தைச் சமர்ப்பிக்கவும்.அதன் பிறகு, நீங்கள் ஆதாரின் PDF ஐப் பதிவிறக்கம் செய்யலாம்.
so எதுக்கு இன்னும் wait பண்றீங்க.. உடனே அப்டேட் பண்ணுங்க..