Wednesday, May 21, 2025

Gpay, PhonePe யூஸ் பண்றீங்களா?? 30ம் தேதி முதல் அமலாகும் புதிய விதி! இதை தெரிஞ்சுக்கோங்க..!

UPI எனப்படும் Unified Payments Interface பரிவர்த்தனை என்பது ஸ்மார்ட்போன் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் ஒரு டிஜிட்டல் கட்டண முறையாகும் . இது பல வங்கிகள் மற்றும் கட்டண சேவைகளை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த கட்டண அமைப்பை வழங்குகிறது..
இப்போதெல்லாம், பணத்தின் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் ஒரு சிறிய மற்றும் பெரிய பரிவர்த்தனைக்கும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துகிறார்கள். தற்போது, நாட்டில் தினமும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் UPI மூலம் செய்கின்றன. அதாவது UPI கட்டணம் மூலம் பணம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நொடி பொழுதில் சென்றடைகிறது.

ஆனால் சில நேரங்களில் தவறான நபர்களின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றி அனுப்புகிறோம். ஆகையால் பல சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் தற்போது இந்த நிலைமை இல்லை,

அதாவது NPCI என்பது தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India),UPI தொடர்பான விதியை வெளியிட்டுள்ளது.

இதன் படி உங்கள் பணம் தவறான நபர்களுக்கு செல்லாது. அது எப்படினு கேக்குறீங்களா??

அதாவது UPI மூலம், P2P எனப்படும் Peer to Peer மற்றும் P2PM எனப்படும் Peer to Peer Merchant என்று சொல்லலாம்.இப்போது எந்த வகையான பரிவர்த்தனையையும் செய்யும்போது, ​​கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மட்டுமே தோன்றும், அது CBS அதாவது Core Banking Solution பதிவு செய்யப்படும்.

அதாவது பணம் செலுத்தும் போது, ​​வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட பெயரை காண்பீர்கள். அந்த நபரின் எண் உங்கள் தொலைபேசியில் வேறு பெயரில் சேமிக்கப்பட்டிருந்தாலும் கூட. சில நேரங்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்ட நபர்களால், குழப்பம் ஏற்படுகிறது, இதனால் பணம் தவறான கணக்குகளுக்குச் செல்கிறது. ஆனால் தற்போது இந்த நிலைமை கிடையாது. இந்த புதிய விதி ஜூன் 30, 2025 முதல் அனைத்து UPI பயன்பாடுகளுக்கும் செயல்படுத்தப்படும்.

சரி,UPI மூலம் பணம் தவறான கணக்கிற்குச் சென்றால் என்ன செய்வது பற்றி பார்க்கலாம்..

சில நேரங்களில், நாம் என்னதான் கவனமாக பரிவர்த்தனைகளைச் செய்தாலும், ஏதோ ஒரு தவறு நடக்கும். UPI மூலம் தவறான கணக்கிற்கு பணம் சென்றால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் வங்கிக்குச் சென்று அல்லது ஆன்லைனில் புகார் செய்யலாம். . வங்கி உதவி செய்யவில்லை என்றால், RBI குறைதீர்க்கும் அதிகாரிக்கு ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம்.

Latest news