இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய A அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் இடம் பெறவில்லை. அண்மைக்காலமாக ரிஷப் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார்.
இதனால் அவரின் பெயர் விடுபட்டதைக் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் நல்ல பார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் புறக்கணிப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. முதல்தர போட்டியில் ஷ்ரேயாஸின் ஆவரேஜ் 48.57 ஆக இருக்கிறது.
ஆனால் முதல்தர போட்டியில் 39 ஆவரேஜ் வைத்திருக்கும் சாய் சுதர்சனுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுத்தவர்கள், இவருக்கு மட்டும் சான்ஸ் தர யோசிக்கின்றனர். இந்தநிலையில் ஷ்ரேயாஸ் புறக்கணிக்கப் பட்டது குறித்து ரசிகர்கள், ”கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும்வரை ஷ்ரேயாஸ்க்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது.
திறமை வாய்ந்த வீரர்கள் BCCIயின் உள்குத்து வேலைகளால் வாய்ப்பின்றி தவிக்கின்றனர். இதனால் தான் விராட் விரைவாக ஓய்வினை அறிவித்து விட்டார் போல. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோற்றாலும் கூட இவர்கள் எல்லாம் திருந்த மாட்டார்கள்,” இவ்வாறு விதவிதமாக சமூக வலைதளங்களில் BCCIஐ வசைபாடி வருகின்றனர்.