விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள், தேர்வுப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பலரும் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 மாவட்டங்களில் தலைவர், செயலாளர் என 216 பேரில் 8 பேர் மட்டுமே கலந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.