ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது. எங்களை பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.
ஓ.பி.எஸ் அணியை இணைக்காமல் அதிமுக வெற்றிபெறாது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறிவந்த எடப்பாடி பழனிசாமி தற்போது கூட்டணி வைத்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை தொண்டர்களுடன் பேசி முடிவு செய்து 15 நாட்களில் அறிவிப்போம் என அவர் கூறியுள்ளார்.