Thursday, August 21, 2025
HTML tutorial

விஜயகாந்தின் குடும்பத்திற்கு வந்த சோதனை? கைநழுவும் குடும்பச் சொத்து? குறிவைத்த பெரும் புள்ளி…

தமிழ் சினிமா குறித்து தெரிந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசியல் களம் குறித்து தெரிந்தவர்களுக்கும் கேப்டன் விஜயகாந்த் குறித்து கட்டாயம் தெரிந்திருக்கும். அதற்கு காரணம் விஜயகாந்த் ஏதோ பத்தோடு பதினொன்றாக இருக்கும் நடிகர் அல்ல. திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் புரட்சி செய்தவர் தான் விஜயகாந்த் . இவர் மறைந்து ஒரு ஆண்டுக்கு மேலாக ஆகியிருந்தாலும், அவரை அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இன்றும் மறவாமல் இருக்கின்றனர்..

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விஜயகாந்திற்கு சொந்தமா கல்லூரி அமைந்துள்ளது . இது 2001-ம் ஆண்டு விஜயகாந்தின் தாய் மற்றும் தந்தையின் பெயரால் ஸ்ரீ ஆண்டாள் அழகர் என்ற பொறியியல் கல்லூரியை தொடங்கி நடத்தி வந்தார். இந்த கல்லூரி கிட்டத்தட்ட 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. BE மற்றும் BTech படிப்புகளில் 7 பாடப் பிரிவுகளுக்கும், முதுகலைப் படிப்புகளில் 4 பாட பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கும் இந்த பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. மாணவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கி வந்தது

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒராண்டை கடந்த நிலையில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி தற்போது வேறொரு நிர்வாகத்துக்கு கைமாறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய அளவில் பிரபலமான கல்வி நிறுவனமான தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம், சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பான ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வாங்கியுள்ளது. தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம் அதனை புதிய பொலிவுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரியை நிர்வகிப்பதில் சவால்களைச் சந்தித்து வந்துள்ளதால் இப்படியொரு முடிவை விஜயகாந்த் குடும்பம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமமானது, கலை & அறிவியல், பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வாங்கியுள்ள அந்த கல்வி நிறுவனம் இதுகுறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்து அதனை உறுதி செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News