Friday, July 4, 2025

திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, பெட்ரோல் பங்கில் அரிவாள்..மர்மநபர்கள் அட்டகாசம்

நேற்று அதிகாலை நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் பாளையங்கோட்டை திமுக ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதே கும்பல் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலிலும் பெட்ரோல் குண்டை வீசி சென்றது தொடர் விசாரணையில் தெரிந்தது.

இந்த சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்பாக நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு முகமூடி அணிந்து சென்று அங்குள்ள ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டி தாக்கி இலவசமாக பெட்ரோல் போட வைத்துள்ளனர்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news