நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127 வது மலர் கண்காட்சி துவங்கியது. வரும், 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.
ராஜராஜ சோழனின் அரண்மனை, கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, அன்னபறவை படகு போன்ற உருவங்கள், 2 லட்சம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.
30 ஆயிரம் மலர் தொட்டிகள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.