Friday, May 16, 2025

கிணற்றில் விழுந்த மாட்டை நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மலைமாட்டை வெகு நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி விலக்கு பகுதியில், முட்செடி மற்று கொடிகள் அடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலையில், தண்ணீர் நிறைந்த கிணறு அமைந்துள்ளது. அப்பகுதியில் மேய்ச்சலில் இருந்த மாடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, கிணற்றில் தத்தளித்த மலைமாட்டை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

Latest news