Thursday, May 15, 2025

அமெரிக்காவை அடுத்து இந்தியாவை சீண்டும் பிரிட்டன்! கழுத்தை நெறிக்கும் புதிய சிக்கல்!

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி மீண்டும் தீவிரமாவதைத் தொடர்ந்து, குடியேற்ற விதிகள் சட்டபூர்வமானவர்களுக்கே எதிராக கடுமையாகிற சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோத குடியேற்றமெனத் தொடங்கிய தடைகள், இப்போது உரிமைபூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களையும் தாக்குகின்றன. இதனால் இந்தியர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரிட்டனும் அதே பாதையைத் தொடர்ந்துள்ளது. புதிய பிரதமராக பதவியேற்ற கெய்ர் ஸ்டார்மர், குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளார். இதன் காரணமாக அங்கு வாழும் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட இருக்கின்றனர்.

முன்னதாக, 5 ஆண்டுகள் பிரிட்டனில் வசித்தாலே நிரந்தரமாக தங்க விண்ணப்பிக்க முடிந்தது. ஆனால் இப்போது, அந்த காலம் 10 ஆண்டுகளாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொழிலாளர் விசாவுக்கும் புதிய தடைகள் அமலுக்கு வந்துள்ளன. முன்பு A-லெவலுக்கு சமமான கல்வி இருந்தால் போதுமானது. ஆனால் இப்போது, கட்டாயமாக டிகிரி படிப்பு இருக்க வேண்டும் என்பதே புதிய நிபந்தனை.

பிரிட்டனில் ஆண்டுக்கு 2.5 லட்சம் இந்தியர்கள் கல்வி, வேலை வாய்ப்புக்காக செல்கின்றனர். இப்போது இவர்களுக்கு எதிராக விதிகள் கடுமையாக்கப்படுவதால், எதிர்காலம் சிந்திக்கத் தூண்டும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் ஸ்டார்மர், வெளிநாட்டினரை நிரந்தரமாக தங்க விட விரும்பவில்லை என்று நேரடியாகவே கூறியிருக்கிறார். ஆனால், வருடத்துக்கு எவ்வளவு வெளிநாட்டினரை அனுமதிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதனைச் சரி செய்ய, ஒரு வருட உச்சவரம்பு வைக்கவேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தினாலும், அதையும் ஸ்டார்மர் நிராகரித்துவிட்டார். குடியேற்றம் கணிசமாக குறையும் என்று மட்டும் உறுதி அளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தோர் அல்லாதவர்கள்தான் 85% குடியேற்றத் தொகையை நிரப்புகிறார்கள். இது போன்ற நிலையில், இந்தியர்களுக்கு எதிராகும் விதத்தில் இங்கிலாந்து சட்டங்களை மாற்றும் நடவடிக்கை எடுத்திருப்பது, ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது.

இந்தியர்களுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து இப்போது பிரிட்டனும் அதே பாதையில்…  இந்தியா… அடுத்த இலக்கா? என்ற கேள்வியோடு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது… இந்நிலையில் வெளிநாட்டுப் படிப்பு கனவுகள் என்ன விதத்தில் மாறும் என்பதே இன்றைய மிக முக்கியமான விவாதமாகி விட்டது.

Latest news