சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடெல் நிறுவனம், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
இந்தியாவில் ஐடெல் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஐடெல் ஏ90 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.
ஏவியானா 2.0 என்ற செய்யறிவு தொழில்நுட்ப அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 7 ஆயிரம் விலைக்கு ஒரு ஸ்மார்ட்போனில் இந்த சிறப்பம்சங்கள் இடம்பெறுவது அரிதானது.
ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- Screen: 6.6 அங்குல 90Hz ரீப்ரஷ் ரேட் கொண்ட திரை
- Processor: T7100
- Battery: 5000mAh, 10W சார்ஜிங்
- Camera : பின்பக்கம் 13MP, முன்பக்கம் 8MP
- RAM: 64GB மற்றும் 128GB
இந்த ஸ்மார்ட்போனின் விலை ₹6,499 (64GB) மற்றும் ₹6,999 (128GB) ஆகும்.