சர்வதேச T20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக, ரோஹித் சர்மா – விராட் கோலி இருவரும் சேர்ந்தே அறிவித்தனர். இதனால் ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த போது, விராட் மீதுதான் அனைவரின் கவனமும் இருந்தது.
ஆனால் BCCI அழுது, புலம்பியும் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து Retire ஆவதாக, கோலி அறிவித்து விட்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இவர்கள் இருவரின் இடத்தை நிரப்புவது BCCIக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இடையே மோதல் வெடித்துள்ளதாகத் தெரிகிறது. சுப்மன் கில் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கம்பீரும், கேஎல் ராகுல் தான் பெஸ்ட் என அகர்கரும் கருதுகின்றனராம்.
இதனால் இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஓபனிங் வீரரை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் விராட்டுக்கு கருண் நாயரும், அவருக்கு பேக்கப் வீரராக சாய் சுதர்சனும் இடம் பெறுவார்கள் என்றும் தகவல்கள் அடிபட்டு வருகின்றன.