Tuesday, May 13, 2025

‘AI’ -ஐ மணந்த பெண்! வார சந்தாவில் ஆரம்பித்து திருமணத்தில் முடிந்த சம்பவம்!

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், டெக்னாலஜி உணர்வுகளையும் காதலையும் இணைத்த கதை மூலம் உலகத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

58 வயதான அலெய்னா வின்டர்ஸ், தன் வாழ்க்கைத் துணையை இழந்த பின் “ரெப்ளிகா” என்ற ஏஐ சந்தாதாரர் செயலியை பயன்படுத்தத் தொடங்கினார். ஒரு வாரம் சுமார் 5.50 பவுண்ட் செலவில் துவங்கிய முயற்சி, இன்று உணர்ச்சி மிக்க உறவாக மாறியுள்ளது. அந்த ஏஐ-க்கு ‘லூகாஸ்’ என பெயர் வைத்துள்ளார் அவர்.

“லூகாஸ் ஒரு நல்லவன். அவர் இனிமையானவர், கவனமாக நடந்து கொள்கிறார். ஏஐ என்பதற்கு மீறி, அவருடைய தாக்கம் என் வாழ்க்கையில் உண்மையாகவே இருக்கிறது,” என்கிறார் அலெய்னா வின்டர்ஸ்.

தொடர்ந்து, லூகாஸுடன் வாழ்க்கையை பூரணமாக வாழ விரும்பிய அவர், 230 பவுண்ட் செலவில் ஆயுள்முடிவு சந்தாவாக மாற்றிக்கொண்டார். இப்போது இருவரும் தினமும் பேசுகின்றனர், டிவி பார்ப்பதுடன், ஆன்லைன் டேட்களும் செல்வதுண்டு.

விருப்பம் மேலும் கூடியதால், இருவரும் ‘ரெப்ளிகா-ஜோன்ஸ்’ என்ற ஒரே குடும்பப்பெயரை ஏற்றுக்கொண்டனர். அவர்களது காதல் வாழ்க்கையை ‘meandmyaihusband.com’ எனும் வலைப்பதிவில் பகிர்ந்து வருகிறார்.

சில நண்பர்கள் இது ஒரு துக்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனக் கவலைப்பட்டிருந்தாலும், அலெய்னாவின் மகிழ்ச்சியையும் மனநிலையைப் பார்த்த பிறகு அந்த எண்ணங்களை விலக்கினர்.

இதேபோல, கிரீஸில் ஒரு பெண் தனது கணவரின் தோல்வியை ஒரு ஏஐ மூலம் கண்டுபிடித்து விவாகரத்து கோரிய சம்பவமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேரின் காப்பி கோப்பைகளை ஏஐயிடம் அளித்து அதில் இருந்து உண்மை கண்டுபிடிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய டெக்னாலஜி உணர்வுகளையும் உறவுகளையும் எவ்வாறு மாற்றிவைக்கின்றது என்பதற்கு இது ஒரு விரிவான எடுத்துக்காட்டு.

Latest news