பொதுவாக பெரும்பாலானோர் கால்களில் வெடிப்பு இருப்பதை பார்க்கிறோம்..குறிப்பாக இல்லத்தரசிகள் கால்களில் காணப்படும்..குதிகால் வெடிப்பு என்பது, பாதங்களின் குதிகால் பகுதியில் ஏற்படும் விரிசல்களையும், வெடிப்புகளையும் குறிக்கிறது.
சரி, இந்த குதிகால் வெடிப்பு எப்படி ஏற்படும் என்று தெரியுமா??
பொதுவாக கோடையில் குதிகால் தோல் ஈரம் இல்லாமல் மிகவும் வறண்டு இருந்தால் குதிகால் வெடிப்பு வர வாய்ப்புள்ளது என்கின்றனர். அது மட்டுமின்றி வெறும் காலுடன் நடந்தால் குதிகாலில் தூசி, அழுக்குகள் குவிந்து வெடிப்பை ஏற்படுத்தும்.இதனோடு கணுக்காலில் அதிக அழுத்தம் ஏற்பட்டால், குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
சிலருக்கு பாதத்தில் வியர்வை சுரக்கும், எனவே பாதத்தில் ஏற்படும் வியர்வையால் அழுக்கு படிந்து குதிகால் விரிசல் பிரச்சனையை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
நமது உடலில் வைட்டமின் C மற்றும் E என சில வைட்டமின்களின் குறைபாடு காரணத்தாலும் குதிகால் வெடிப்பு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தற்போது கோடைகாலம் என்பதால்குறைவான தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும்.இதனாலும் கூட குதிகால் வெடிப்பு பிரச்சினை வரும் என்கின்றனர்.
சரி, இந்த குதிகால் வெடிப்பை வராமல் மற்றும் நீக்க என செய்ய வேண்டும் என்று தெரியுமா?
குதிகால் வெடிப்பு நீங்க, ஈரப்பதமூட்டும் கிரீம்கள் அதாவது moisturizers, தேங்காய் எண்ணெய், பியூமிஸ் கல், யூரியா, சாலிசிலிக் அமிலம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இறந்த சரும செல்களை நீக்குவதோடு, கால்களை அடிக்கடி ஈரப்பதத்துடன் வைத்திருப்பது முக்கியம்.