Tuesday, May 13, 2025

இந்த வெயிலில் கருப்பு ஆடை அணிகிறீர்களா? அப்போ கதை முடுஞ்ச்சு போங்க..!

பெரும்பாலும் கருப்பு நிற ஆடைகளை பலர் விரும்புவார்கள்..பொதுவாக கருப்பு நிற ஆடைகளை அணியும் போது தன்னம்பிக்கைவும், உணர்வுகள் மற்றும் உணர்ச்சியாகவும்,குறிக்கோளாக செயல்படுவது என அணியும் நபர்கள் உணர்வதாக சொல்லிக் கேட்டிருப்போம்..
ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது என்பார்கள் அது ஏன்,எதற்கு என்பதை பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்..

அதாவது கருப்பு போன்ற அடர் நிற ஆடைகள் சூரிய கதிர்களை அதிகமாக உறிஞ்சி உடலை விரைவாக வெப்பமடையச் செய்யும் என்பதால் காருக்கு நிற ஆடைகள் அணியக்கூடாது என்கின்றனர்.அது மட்டுமின்றி உடல் சூடாகும் போது உடலை குளிர்விக்க அதிகமாக வியர்வை சுரக்கும். இதனால் நீரிழிப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

வெயிலில் கருப்பு நிற ஆடைகளை அணிந்தால் சருமம் அதிக வெப்பமடைந்து தோல் பதனிடுதல்,
எரிதல் அல்லது தடுப்புகள் போன்ற பிரச்சனைகள் வரும் என்கின்றனர்.

கருப்பு நிற ஆடைகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.. இதனால் சோர்வு, வெப்ப பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும்.

சரி, கோடையில் என்ன நிற ஆடை அணியலாம் என்று கேட்கிறீர்களா??

அதாவது வெள்ளை, கிரீம், வெளிர் நீலம், மஞ்சள் போன்ற வெளிர் நிற ஆடைகள் கோடைக்கு ஏற்றது. குறிப்பாக பருத்தி கைத்தறி போன்ற லேசான காற்றோட்டமான ஆடைகளை அணியலாம்.

நீங்கள் விரும்பும் கருப்பு நிற ஆடைகளை எப்போது அணிய வேண்டும் ஏறு தெரியுமா?

அதாவது மாலை அல்லது இரவு நேரத்தில் கருப்பு நிற ஆடைகளை அணியலாம் ஏனென்றால் அந்த நேரத்தில் தான் சூரிய தாக்கம் இருக்காது. வெப்பமும் குறைவாக இருக்கும் ஆகையால் மாலை நேரங்களில் கருப்பு நிற ஆடைகளை அணியலாம்.

குறிப்பாக சரும பிரச்சனையிலிருந்து பாதுகாப்பாக வைக்க
கோடையில் லேசான ஆடைகளை அணிவைத்து நல்லது. இது உங்களை பக்கவாதம், நீரிழப்பு, தோல் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க மிகவும் சிறந்தது..

Latest news