Monday, May 12, 2025

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்

சசிகுமார் நடிப்பில் கடந்த மே 1-ந் தேதி வெளியான திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்துக்கு வர வழைத்து பாராட்டியுள்ளார்.

“படம் ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்து, எல்லோருடனும் கனெக்ட் செய்துவிட்டீர்கள். அனைவரும் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள்” என்று அவர் படக் குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

Latest news