Monday, May 12, 2025

‘பான் இந்தியா படங்கள் ஒரு மோசடி’ – இயக்குநர் அனுராக் காஷ்யப் கருத்து

இந்தித் திரைப்படத் துறையில் பணி கலாச்சாரம் பிடிக்காததால் பாலிவுட்டை விட்டு வெளியேறுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பான் இந்தியா படங்கள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது : “என் கருத்துப்படி, பான்-இந்தியா ஒரு மிகப்பெரிய மோசடி. ஒரு படத்தை உருவாக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும்.

ஒரு படத்திற்காகச் செலவிடப்படும் பணம் முழுவதும் படத்தைத் தயாரிப்பதற்குச் செல்வதில்லை. அப்படிச் செய்தாலும், அது பெரும்பாலும் மிகப்பெரிய, யதார்த்தமற்ற செட்களில் செலவிடப்படுகிறது. இதில் எந்த அர்த்தமும் இல்லை. இதுபோன்ற படங்களில் 1 சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகிறது” என்று கூறினார்.

Latest news