Thursday, August 21, 2025
HTML tutorial

சந்தானத்துக்கு எதிராக பாஜக கொடுத்த புகார்.. சர்ச்சையில் சிக்கிய DD Next Level..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வந்து தற்போது ஹீரோவாக கலக்கிவருபவர் நடிகர் சந்தானம்.. இவர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் வெளியாகியது.. ஹாரர் மற்றும் காமெடி கலந்த இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் ஆகிய பலர் நடித்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next level) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் திரைப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நித்த திரைப்படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘Kissa 47’ அண்மையில் வெளியானது.
இதில் திரைப்படங்களை விமர்சிக்கும் நபராக வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானத்திற்காக நகைச்சுவை கலந்த வார்த்தைகளை பாடல் தயாராகியுள்ளது.
இந்த பாடலை கௌதமி என்பவர் எழுதியிருந்தார். தற்போது இந்த பாடல் 9 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது…

இந்த நிலையில் இந்தப் பாடலில் பெருமாள் பாடலான ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலின் வரிகளும் இடம்பெற்றிருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் இதனை திரைப்படத்தில் தடை செய்ய வேண்டும், நடிகர் சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் சந்தானம் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News