பயனர்களின் இருப்பிடத் தரவுகள் (location data) மற்றும் முக அங்கீகாரத் தகவல்களை (facial recognition information) அவர்களின் முறையான அனுமதி இல்லாமல் கண்காணித்து சேமித்து வைத்ததாகக் கூறி, டெக்சாஸ் மாநிலத்தின் வழக்கறிஞர் 2022 ஆம் ஆண்டு கூகுள் மீது வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் டெக்சாஸ் வழக்கறிஞருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. கூகுள் நிறுவனம் கிட்டத்தட்ட $1.375 பில்லியன் (சுமார் ₹11,740 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
டெக்சாஸ் வழக்கறிஞர் கூகுள் மீது மட்டுமல்லாமல், மெட்டா நிறுவனத்தின் மீதும் வழக்குத் தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.