Sunday, May 11, 2025

அடடா..உணவில் பெருங்காயம் சேர்த்துக்கிட்டா இவ்வளவு நன்மையா? ஆனால் இவங்க கண்டிப்பா சாப்பிடக்கூடாது..   

பெருங்காயம் என்பது ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் ஒரு மசாலாப் பொருள். ஒரு செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் பிசின் போல இருக்கும். சமைக்கப்படாத நிலையில் இதன் வாசனை பலருக்கு பிடிக்காது, ஆனால் சமைத்த பின் உணவிற்கு சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்க உதவுகிறது…

சரி, பெரியங்காயத்தால் என நன்மைகள் என்று பாக்கலாம்..

அதாவது பெருங்காயம் அஜீரணம், வாய்வு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு உதவுகிறது,இது பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பெருங்காயம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அது  மட்டுமின்றி உணவுக்கு சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்கிறது என்று கூறுகின்றனர்.

சரி, பெருங்காயம் அதிகம் சேர்ப்பதால் பிரச்சனைகள் தெரியுமா?

வாயு பிரச்சனையை குறைக்க பெருங்காயம் உணவில் சேர்க்கப்படுவதால், அதிகப்படியான  செரிமானத்தை கெடுத்து, வாயு, அமலத்தன்மை, வீக்கம், வலியை ஏற்படும் என்கின்றனர். பெருங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.அது மட்டுமின்றி தலைவலி மற்றும் தலை சுற்றலை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்..

உணவில் அதிகமாக பெருங்காயம் சேர்த்தால் தோல் வெடிப்பு மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும், இதனோடு முகம் மற்றும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்..

பெருங்காயத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வும் ஏற்படுத்துவதோடு, மாதவிடாய் காலத்தில் பிரச்சனை வரும். மிக முக்கியமாக கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். பெருங்காயம்

மீறினால் கர்ப்பப்பை சுருக்கம் மற்றும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..

குறிப்பு இவைகள் எல்லாம் பொதுவான தகவலின் அடிப்படையில் கொண்டவை..  

Latest news