இந்தியா மீது பாகிஸ்தான் வீம்புக்கென்று தேவையில்லாத தாக்குதல்கள் நடத்தி வரும் அதேநேரம் மற்றொரு பக்கம் பாகிஸ்தான் உள்நாட்டிலேயே பொறிகலங்கும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. Balochistan-னில் பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான தாக்குதலைப் போராளிகள் வலிமைப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே அங்கு பாகிஸ்தான் கொடிகள் வீழ்த்தப்பட்டு Balochistan கொடிகள் ஏற்றப்படுவதாக அண்மை தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
ஒரு சில நாட்களாக குவெட்டாவின் Faizabad பகுதியில் பலூச் கிளர்ச்சியாளர்களால் பாகிஸ்தான் படைகள் தாக்கப்பட்டதில் 4 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மட்டுமல்லாமல் சிப்பி என்ற பகுதியிலும் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாமில் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
குறிப்பாக கடந்த வியாழன் அன்று, பலுச் விடுதலை ராணுவம் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கி துவம்சம் செய்துள்ளனர். குறிப்பாக கெச், மஸ்துங் மற்றும் கச்சி ஆகிய இடங்களில் தனித்தனியாக ஆறு ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Balochistan-னில் பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாசி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருக்கிறார். “பலுசிஸ்தானில் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தனது control-ஐ இழந்து வருவதைத் தொடர்ந்து / இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் பலுசிஸ்தானில் மூத்த அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் கடுமையான பாதுகாப்பு இல்லாமல் வெளியே கூட வர முடியாத சூழலே இருக்கிறது என்றும் இங்குப் போராளிகள் குறைவாகவே இருப்பதாக ராணுவத் தளபதி அசிம் முனீர் சொல்வது பொய். போராளிகள் வலிமையாகிக் கொண்டே செல்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.