Saturday, May 10, 2025

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் – அதிபர் டிரம்ப்

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் முழுமையான, உடனடியான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் எனினும், இந்தியா, பாகிஸ்தான் சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Latest news